×

பட்டினப்பாக்கம் முகத்துவாரத்தில் ஆண் சடலம் மீட்பு

சென்னை: பட்டினப்பாக்கம் முகத்துவாரம் அருகே நேற்று காலை பொதுமக்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டபோது, 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து பட்டினப்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி விரைந்து வந்த போலீசார், அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார், போதையில் முகத்துவாரத்தில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

The post பட்டினப்பாக்கம் முகத்துவாரத்தில் ஆண் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Pantapakkam ,CHENNAI ,Pattinappakkam ,Pattinpakkam ,
× RELATED பட்டினப்பாக்கத்தில் காருக்கு வழி...